வழிமுறைகள்
தொடங்குதல்
1: அந்தந்த ஸ்டோருக்குச் (stores) செல்ல கீழேயுள்ள படங்களைக் கிளிக் செய்யவும், அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் “ஹோமர் – “கியூஓ எஸ்எச்என்” (“Homer—QO SHN”) மற்றும் கூகள் பிளே ஸ்டோரில்(Google Play Store) “ஹோமர்” (‘Homer”) ஆகியவற்றைத் தேடுங்கள்.
2: உங்கள் கைபேசியில் ஹோமர் செயலியைcod (Homer App) நிறுவ, பதிவிறக்கத்தை (Download) அழுத்தவும், பின்னர் செயலியைத் தொடங்க ‘திற’(Open) என்பதை அழுத்தவும்.

3: நீங்கள் ஸ்பிளாஷ் (Splash) திரையைப் பார்ப்பீர்கள்.

4: திரையில் உங்கள் மொபைல்எண்ணை உள்ளிட வேண்டும். ”ஒரு முறை கடவுச் சொல் பெறுக” (“Get OTP”) என்பதை அழுத்தவும்.
இங்கு நீங்கள் பிழை எனும் தகவலைப் பார்த்தால், செயலிக்காக உங்கள் மொபைல் எண் செயல்படுத்தப்படாமல் போகலாம், தயவுசெய்து இங்குள்ள படிவத்தை நிரப்பவும், நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம். https://go.gov.sg/homer-feedback

5: எஸ்எம்எஸ் வழியாக நீங்கள் பெறும் 6 இலக்க எண்ணை (PIN), உள்ளீடு செய்யவும். “சரிபார்க்கவும்” (“Verify”) என்பதை அழுத்தவும்.

6: நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வசிப்பிடத்தின் அஞ்சல் குறியீட்டு எண்ணை உள்ளிட்டு, “உறுதிப்படுத்து” (“Confirm”) என்பதை அழுத்தவும்

7: அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை திரையில் பார்ப்பீர்கள், “தொடரவும்” (“Continue”) என்பதை அழுத்தவும்.

8: “ஹோமரை நீங்கள் இருக்கும் இடத்தை அணுக அனுமதிக்கலாமா?” (“Allow Homer to access location?” ) என்று கேட்கும்போது, iOS பயன்படுத்துவோருக்கு “செயலியைப் பயன்படுத்தும்போது அனுமதிக்கலாம்” (“Allow While Using App”) என்பதை அழுத்தவும், Android பயன்படுத்துவோருக்கு, “எல்லா நேரத்திலும் அனுமதிக்கலாம்” (“Allow all the time”) என்பதை அழுத்தவும்.

8.1: iOS சாதனங்களுக்கு, “ஹோமரை புஷ் (push) அறிவிப்புகள் அனுப்ப அனுமதிக்கலாமா?” (“Allow Homer to send push notifications?”), என்று திரையில் தோன்றும்போது, ( “அனுமதி” ) (“Allow”) என்பதை அழுத்தவும்.

9: நீங்கள் இப்போது முகப்புத் திரையைப் (Home Screen) பார்ப்பீர்கள்

10. அன்ட்ராய்ட் சாதனங்களுக்கு,, பேட்டரி அமைப்புகளை உங்கள் குறிப்பிட்ட கைபேசிக்கு உள்ளமைக்க, பின்வரும் காணொளி வழிகாட்டியைப் பாருங்கள். நீங்கள் இருக்குமிடத்தைப் பின்னனியில் தெரிவிக்க இது அனுமதிக்கும்.
[Huawei] [Oppo] [Samsung] [Vivo] [Xiaomi/Redmi]
அறிக்கையைச் சமர்ப்பிக்கவும்
ஒரு நாளைக்கு பல முறை அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய உத்தரவில் உள்ளீர்களா அல்லது தடைகாப்பு ஆணையில் உள்ளீர்களா என்பதைப் பொறுத்து கீழ்க்கண்டவற்றை நீங்கள் செய்வது மாறுபடும்.
1. உங்கள் அடையாளத்தை சரிபார்ப்பதற்காக உங்கள் புகைப்படத்தை சமர்ப்பித்தல்.
1.1 செல்ஃபி எடுக்கும் விவரத்தைக் காட்டும் பக்கம் தோன்றும்போது, ‘தொடருக’ (proceed) கேமரா பொத்தானை அழுத்தவும்.

1.2 கேமரா அனுமதி கேட்கும்போது, iOS பயன்படுத்துவோர் “சரி” (“OK”) என்பதை அழுத்தவும், Android பயன்படுத்துவோர், “அனுமதி” (“Allow”) என்பதை அழுத்தவும்.

1.3 செல்ஃபி எடுக்க உங்கள் முகத்தை சரியான கோணத்தில் வைத்து வட்டமாக இருக்கும் பொத்தானை அழுத்தவும்.

1.4 தேவைப்பட்டால் மீண்டும் புகைப்படம் எடுக்கலாம், இல்லையெனில் “புகைப்படத்தைப் பயன்படுத்து” (“Use Photo”) என்பதை அழுத்தவும்

2. சுகாதார அறிக்கையை சமர்ப்பித்தல்
2.1 விவரங்களைப் பூர்த்திசெய்து “சமர்ப்பி” (“Submit”) என்பதை அழுத்துவும்
இருமல் (Cough): ஆம் (Yes) / இல்லை (No)
தொண்டை வலி (Sore throat): ஆம் (Yes) / இல்லை (No)
மூக்குச்சளி (Running Nose): ஆம் (Yes) / இல்லை (No)
மூச்சுதிணறல்(Shortness of Breath): ஆம் (Yes) / இல்லை (No)

கேள்விகள் உண்டா?
எங்களை இங்கு தொடர்புகொள்ளுங்கள். விரைவில் உங்களுக்குப் பதிலளிப்போம். https://go.gov.sg/homer-feedback